தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

சமீப காலங்களில் இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய அரசுத்துறை செயலாளர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசனை செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன்கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார். மேலும் இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com