முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்- மேலும் 3 மாதத்துக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பல ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் முடிவடைந்தது.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்- மேலும் 3 மாதத்துக்கு ஒப்பந்தம் நீட்டிப்பு
Published on

சென்னை,

கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 3 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடைந்த ஒப்பந்ததாரர்களுக்கு மேலும் 3 மாத காலம் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்குள் புதிய டெண்டர் கோரப்பட்டு புதிய ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பல ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com