அனைத்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை

அனைத்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

இந்நிலையில் வழிக்காட்டு தளங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், நேரம் குறைப்பது தொடர்பாகவும், வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அனைத்து மதத்தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மதம் சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com