கோவையில் சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம்: கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவையில் 13 வயது சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவையில் சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம்: கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Published on

கோவை,

கோவை ஓண்டிபுதூர் பகுதியில் 13 வயது சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் அடித்ததில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இந்த சம்பவம் குறித்து 3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தினத்தந்தியில் வெளியான செய்தி அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com