இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரசார இயக்கம்

திருநாவலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரசார இயக்கம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரசார இயக்கம்
Published on

உளுந்தூர்பேட்டை, 

டெல்லியில் 15 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும், கியாஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருநாவலூரில் பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் நாகப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் பிரசார கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் கலியபெருமாள், ஒன்றிய துணை செயலாளர் ரவி, ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com