சமுதாய வளைகாப்பு விழா

புளியரையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சமுதாய வளைகாப்பு விழா
Published on

செங்கோட்டை:

புளியரை புதுவீட்டு அம்மன் கோவில் மண்டபத்தில் தென்காசி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளாச்சி திட்டப்பணிகள் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட திட்ட அலுவலா ஜோஸ்பின் சகாயபிரமிளா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலா பரக்கத்சுல்தானா, கண்காணிப்பாளா சாகுல்ஹமீது, புளியரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா கிருஷ்ணபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனா. மேற்பார்வையாளா அண்ணாமலை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சுமார் 125க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனா. அவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூலம் மற்றும் மதிய விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்காணிப்பாளாகள், மேற்பார்வையாளாகள், அங்கன்வாடி பணியாளாகள், உதவியாளாகள் பொதுமக்கள் உள்பட பலா கலந்து கொண்டனா.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com