எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஜூலை 15,16,17-ம் தேதிகளில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி கே. பழனிசாமி
Published on

சென்னை,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:-

கலந்தாலோசனை கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டம் நடைபெறும் தேதி,கிழமை,நேரம் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விவரங்கள்:-

15.7.2026 - புதன்

காலை 10 மணி ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு

காலை 11.30 மணி திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு

மாலை 4.30 மணி தேனி கிழக்கு, தேனி மேற்கு

16.7.2026 - வியாழன்

காலை 10 மணி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு புதுக்கோட்டை கிழக்கு

காலை 11.30 மணி கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு

மாலை 4.30 மணி கடலூர் தெற்கு

18.7.2026 - வெள்ளி

காலை 10 மணி கரூர்

காலை 11.30 மணி நீலகிரி

மாலை 4.30 மணி விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு

வளர்ச்சி பணிகள்

இந்த ஆலோசனை கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும்; கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com