

சென்னை,
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டம் நடைபெறும் தேதி,கிழமை,நேரம் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விவரங்கள்:-
20.7.2026 - திங்கள்
காலை 10 மணி மதுரை மாநகர்
காலை 11.30 மணி ராமநாதபுரம்
மாலை 4.30 மணி மதுரை புறநகர் கிழக்கு மதுரை புறநகர் மேற்கு
21.7.2026 – செவ்வாய்
காலை 10 மணி தென்காசி வடக்கு தென்காசி தெற்கு
காலை 11.30 மணி கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மேற்கு
மாலை 4.30 மணி தூத்துக்குடி வடக்கு தூத்துக்குடி தெற்கு
22.7.2026 - புதன்
காலை 10 மணி திருப்பூர் மாநகர் திருப்பூர் புறநகர் மேற்கு
காலை 11.30 மணி திருப்பூர் புறநகர் கிழக்கு
மாலை 4 மணி நாமக்கல்
மாலை 5.30 மணி வட சென்னை தெற்கு (கிழக்கு) வட சென்னை தெற்கு (மேற்கு)
23.7.2026 - வியாழன்
காலை 10 மணி கோவை மாநகர் கோவை புறநகர் வடக்கு
காலை 11.30 மணி கோவை புறநகர் தெற்கு கோவை புறநகர் மத்தியம்
மாலை 4 மணி திண்டுக்கல் கிழக்கு திண்டுக்கல் மேற்கு
மாலை 5.30 மணி வட சென்னை வடக்கு (கிழக்கு) வட சென்னை வடக்கு (மேற்கு)
24.7.2026 - வெள்ளி
காலை 10 மணி விழுப்புரம்
காலை 11.30 மணி திருவாரூர்
மாலை 4.30 மணி சேலம் மாநகர் சேலம் புறநகர்
25.7.2026 - சனி
காலை 10 மணி கள்ளக்குறிச்சி
காலை 11.30 மணி தென் சென்னை வடக்கு (கிழக்கு) தென் சென்னை தெற்கு (கிழக்கு)
மாலை 4 மணி தென் சென்னை வடக்கு (மேற்கு) தென் சென்னை தெற்கு (மேற்கு)
மாலை 5.30 மணி சென்னை புறநகர் திருவள்ளூர் தெற்கு
இந்த ஆலோசனை கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும்; கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.