மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலியாகின.
மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி
Published on

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர்கள் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். கருப்புசாமி (35) என்பவர் 19 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை அந்த பகுதியில் பெய்தது. அப்போது கூவா கரடு அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்த நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாடிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆடுகளை உடல்கூராய்வு செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com