ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு: யார் அவர்? போலீசார் விசாரணை

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு: யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- களங்காணி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com