காவல்துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்வதற்கான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வருகிற பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com