மொபட் மீது வேன் மோதி பெண் பலி

மொபட் மீது வேன் மோதி பெண் பலி
Published on

காவேரிப்பட்டணம்:

தர்மபுரி மாவட்டம் கொண்டலஅள்ளியை சேர்ந்தவர் முனிப்பன். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 53). இவர் மொபட்டில் நெடுங்கல்- காவேரிப்பட்டணம் சாலையில் ஏழுமலையான் கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேன் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முனியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com