ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாதவர்... சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி

எழுதித் கொடுக்கும் வசனங்களை மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.
ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாதவர்... சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி
Published on

திருச்சி,

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள 590 பள்ளிகளில் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் மீது கோவில் நிலத்தை போலியாக பத்திரப் பதிவு செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பேசிய வாய் என்ன வாய், மதுரையில் பேசிய வாய் என்ன வாய் என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். இவர்களுக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடலாம்; ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாது. இவர்களுக்கு ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாது. திருவண்ணாமலை பொது தரிசனம்; மதுரை கும்பாபிஷேகம். இதை எப்படி ஒப்பிட முடியும்?"

மதுரை கும்பாபிஷேகத்தில் பல வேலைகள் இருந்ததால் ஏற்பாடுகளை கவனிக்க நாங்கள் விஐபி தரிசன வழியில் சென்றோம். சாதாரண நாட்களில் விஐபி தரிசன வழியில் செல்வது குறித்து பேசினால் அவர் கும்பாபிஷேக நாளில் விஐபி தரிசனம் வழியில் செல்வது குறித்து பேசுகிறார். கும்பாபிஷேக விழாவில் சிலரை எம்.எல்.ஏ. ஒருவர் அழைத்துச் சென்றது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பாட்டு பாடுகிறார்கள், பாட்டு பாடுகிறார்கள் எனக் கூறிக்கொண்டே மூன்று மாதமாக எதிர்க்கட்சித் தலைவர் பாட்டு பாடி வருகிறார். சட்டப்பேரவைக்கு வந்து கிளாசை கவனித்தால் யார் அமைச்சர்? யார் எம்.எல்.ஏ.? என்பது தெரியும். ஆனால் கிளாசை கட் அடித்து விட்டு சென்று விடுவதால் அப்படித் தெரியவில்லை. முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின், திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்கு எழுதி கொடுக்கும் வசனங்களை பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com