இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் கடந்த 25.11.2025 அன்று நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (வயது 62) என்பவரை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று கயத்தாறு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com