சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை

சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டு பேர்கள் கொல்லப்பட்டு, அங்கிருந்த தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டது.
சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை
Published on

மயிலாடுதுறை,

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் நுழைந்து கொடூரமாக வியாபாரி குடும்பத்தை கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜ் மற்றும் மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொலையாளிகள் ஐந்து பேர் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com