அன்புமணிக்கு போட்டியாக டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு

பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகனும், தலைவருமான டாக்டர் அன்புமணியும் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம்
பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகனும், தலைவருமான டாக்டர் அன்புமணியும் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று பேட்டியளித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்தார்.
இதன் மூலம் டாக்டர் அன்புமணி அறிவித்த போராட்டத்துக்கு போட்டியாக டாக்டர் ராமதாசும் போராட்டம் அறிவித்திருக்கிறார் என்று அக்கட்சியினரே பேசிக்கொண்டனர்.
Related Tags :
Next Story






