சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

மத்திய பாதுகாப்புப்படை வீர‌ர்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
Published on

சென்னை,

சென்னையில் 2 இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஓய்வுபெற்ற ஆர்டிஓ அதிகாரி (போக்குவரத்து அலுவலக அதிகாரி) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், திருவொற்றியூரில் உள்ள தொழிலதிபர் முருகேசன் என்பவரின் வீட்டிலும் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்புப்படை வீர‌ர்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com