பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பழனி நகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
Published on

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பழனி நகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று அடிவாரம் நடுநிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகபுரம் நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, ஆணையர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர். நகர்நல அலுவலர் மனோஜ்குமார், வட்டார கல்வி அலுவலர்கள் ரமேஷ்குமார், ஆனந்தம், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com