5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 61), தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட நடராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரையா உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வக்கீல், கோர்ட்டு விசாரணையை முறையாக கண்காணித்த போலீஸ் அதிகாரிகளை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com