விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
Published on

ஆனைமலை: ஆனைமலை அடுத்த கோட்டூர் கே.எம்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது 79). வயோதிகம் காரணமாக இவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காளியம்மாள் விஷம் குடித்து(சாணி பவுடர்)தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையறிந்த அவரது மகன் பழனிச்சாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் காளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com