சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை


சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
x
தினத்தந்தி 2 Sept 2025 9:55 AM IST (Updated: 2 Sept 2025 1:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

தியாகராயகநகரில் ஆடிட்டர் விஜயராகவன் என்பவரது வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆடிட்டர் விஜயராகவன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார் என்பது தெரியவந்ததால் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பினர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story