நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த ஈபிஎஸ்.. முந்திக்கொண்டு குளிர்பானங்களை எடுத்து சென்ற மக்கள்

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த ஈபிஎஸ்.. முந்திக்கொண்டு குளிர்பானங்களை எடுத்து சென்ற மக்கள்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் சேலம் சூரமங்கலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மோர், கம்மங்கூழ், தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கிய நிலையில், அவற்றை பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனிடையே பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பொறுமை காக்காத சிலர், நீர்மோர் பந்தலின் பின்புறம் கைகளை உள்ளே விட்டு குளிர்பானங்களை அள்ளிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com