ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுட்டனர்.

முன்னதாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. இதன்படி மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியூர்களில் இருந்து அரசியல் கட்சியினர் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்து வந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, மாலை 6 மணியோடு பிரச்சாரத்தை நிறைவு செய்து தொகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com