ஈரோடு: வார விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஈரோடு: வார விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை உள்ளது. இங்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்போது ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்வார்கள்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை விடுமுறை காலங்களில் அணையில் கூட்டம் அலைமோதும். மேலும் அங்குள்ள பூங்காவில் விளையாடியும், அணை பகுதியில் விற்கப்படும் சூடான மீன் வறுவல்களை வாங்கி ருசித்தும் மகிழ்வார்கள்.

தற்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com