தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் மகன் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.
தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் மந்திரராசு (வயது 62), அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மகன் சரவணபெருமாள் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் மந்திரராசு மன வேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குப்பேட்டு தற்கெலை செய்து கெண்டார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com