பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவ விழா

அம்மன்கோவில்பதி கிராமத்தில் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவ விழா நடைபெற்றது.
பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவ விழா
Published on

மத்தூர்

மத்தூர் ஒன்றியம் அம்மன் கோவில் கிராமத்தில் வாணிப்பட்டி பெருமாள் கோவிலில் புதிய தங்க கருட சேவை உற்சவ விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மேல்விளக்கு ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. இரவு நான்கு மட வீதியில் சாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் ஊர்வலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com