தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

புதுக்கோட்டையை அருகே இந்திராநகர் பகுதியில் ஒருவடைய தோட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
Published on

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை அடுத்த நம்பிக்கைமீண்டான் கிராமம், இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். நேற்று இவரது வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தோட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாகவமாகப் பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com