

ஈரோடு,
ஈரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வெடிக்கப்பட்ட வான வேடிக்கை பட்டாசால், தென்னை மரம் தீப்பிடித்து எரித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு அதிமுகவின் வானவேடிக்கையோடு வரவேற்பளித்தனர். அப்போது பட்டாசு பாய்ந்ததில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.