

திருவள்ளூர்,
ஆந்திர மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருவள்ளூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால், பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வேலைக்குச் செல்லவும் தரைப்பாலத்தை கடக்க வேண்டிய நிலையில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளம் ஏற்படும் சமயங்களில் இத்தகைய சிரமங்களை தவிர்க்க மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.