குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை துவங்கவில்லை. இந்த நிலையில் நேற்று குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் நேற்று மாலைக்கு மேல் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் சிறு சிறு கற்கள் மற்றும் மரத் துண்டுகள் விழுந்தன. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

நள்ளிரவுக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று காலையில் சாரல் மழை குறைவாக இருந்தது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com