குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?
Published on: 

ராணிப்பேட்டை,

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் அரக்கோணம் அறிவுசார் மையம் ஆகியவை சார்பில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் எண். 9, ஆற்காடு சாலை. பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் (தலைமை தபால் நிலையம் அருகில்) என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது deoranipet.studycircle@gmail.com-என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

போட்டி தேர்வு

மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com