

சென்னை,
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
இந்த நிலையில், நாடுமுழுவதும் நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் எரிவாயு விலையில் மாற்றம் செய்யும் முறை நடைமுறையில் இருக்கிறது. அதன்படி நாளை முதல் விலையை உயர்த்தும் திட்டத்தில் எரிவாயு நிறுவனங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அமெரிக்கா-ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. பல்வேறு மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.