இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: வடமாநில வாலிபர்கள் கைது

நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர்.
இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: வடமாநில வாலிபர்கள் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் வீராசாமி நகரை சேர்ந்த ரகுபதி என்பவரின் மனைவி சத்யா (வயது33). இவர், நேற்று மாலை எளாவூர் ரெயில் நிலையத்தையொட்டிய தொம்பரை ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நோட்டமிட்டவாறு வந்த 2 வடமாநில வாலிபர்கள் சத்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சத்யா கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள், தங்கச் சங்கிலி பறித்து கொண்டு தப்ப முயன்ற வட மாநில வாலிபர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச் சங்கிலி பறித்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபுஜார் (19), காசிம் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com