சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர் மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி

மாணவியின் சகோதரிக்கு தற்காலிக செவிலியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர் மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்ற செவிலியர் மாணவி, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சையின்போது அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்த்தால் மாணவி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக கூறியும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் சக செவிலியர் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமான்நல்லூரில் மாணவியின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாணவியின் குடும்பத்தினரை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், சிகிச்சையின்போது உயிரிழந்த செவிலியர் மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த செவிலியர் மாணவியின் சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக செவிலியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு இலவச வீடு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com