சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு
Published on

சேலம்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீர் பயணமாக இன்று சேலம் வந்தடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அவருக்கு துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். பின்னர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

முன்னதாக ஆளுநர் ரவி,. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com