சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதா? - தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு

பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதா? - தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்

பரவும் செய்தி

சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில்," கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்படுவதாகவும், தற்பொழுது அப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com