தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இத்தனை பேர் பலியா..?

நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இத்தனை பேர் பலியா..?
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 39,716 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், இதில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

71,000 சாலை விபத்துகள்

கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 71,000 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில், 18,000 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு முதல் ஏழு மாதங்களிலேயே 39,716 விபத்துகள் பதிவாகியுள்ளன.

சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க, போக்குவரத்துத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதுடன், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்துகளின் எண்ணிக்கை

நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது என தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு - உயிரிழப்புகள்

2022 - 17,884

2023 - 18,347

2024 - 18,007

2025 - 18,000

2026 (ஜூலை வரை) - 10,309

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தொழில்நுட்பக் கண்காணிப்பை அதிகரிப்பதுடன், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com