தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதம்


தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதம்
x

சென்னையில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வபோது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது. கடந்த பல நாட்களாக சராசரிக்கும் குறைவான வெப்பநிலையே பதிவாகி இருந்தநிலையில்,

சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று பகலில் கடுமையான வெப்பக்காற்று வீசியது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்தநிலையில், தமிழகத்தில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் 102.9 டிகிரி பாரன்ஹீட், வேலூர் - 102.2, நுங்கம்பாக்கம் - 100.4, மீனம்பாக்கம் -100.5, ஈரோடு -100.4, கரூர் பரமத்தி - 101.3, மதுரை - 101.1, பாளையங்கோட்டை -100.7, பரங்கிப்பேட்டை, தஞ்சையில் தலா 100.4, திருச்சி 101.6, தூத்துக்குடி - 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story