கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நீலகிரி,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 27) விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com