ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்.
ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வெலிங்டன் மைதானத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டன. இதையடுத்து வெலிங்டன் மைதானத்தில் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

அதனைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com