விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? - திருமாவளவன் கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் த.வெ.க.வுக்கு, பா.ம.க.வினர் எப்படி வாக்களிப்பார்கள்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? - திருமாவளவன் கேள்வி
Published on: 

சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி, மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. பொதுத்தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிதான் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.பொதுத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றது. மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து என்ன பயன்?. அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாற வாய்ப்புள்ளது என மக்கள் நினைத்திருக்கக்கூடும். அ.தி.மு.க. இந்த அளவுக்கு வாக்குச்சரிவை சந்திக்க என்ன பின்னணி என்பதை ஆய்வு செய்வதன் மூலம் தான் வாக்குகள் எவ்வாறு சிதறியது என்பதை உறுதிபடுத்த முடியும்.

பா.ம.க.வினர் எப்படி வாக்களிப்பார்கள்?

யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு எடுத்த பா.ம.க.வின் வாக்குகள் அப்ப டியே 100 சதவீதம் த.வெ.க.வுக்கு வந்துவிட்டதை போன்ற தோற்றத்தை உரு வாக்குகிறார்கள். வி.சி.க. இடம்பெறும் த.வெ.க. அணிக்கு பா.ம.க.வினர் எப்படி வாக்களிப்பார்கள்? என்பது பெரிய கேள்வி.கடந்த காலங்களில் அப்படி நடக்கவில்லை.

த.வெ.க.வுக்கு பா.ம.க.வினர் வாக்களித்துள்ளார்கள் என்று கூறுவது எங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக் கம் மட்டுமே. 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றிக்கு வி.சி.க.வின் வாக்குகள் பயன்கொடுத்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். பா.ஜனதாவை எதிர்ப்பதற்கு 'இந்தியா' கூட்டணியில் தி.மு.க. சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக கருதுகிறேன்இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com