சேலம் இரும்பாலையில் ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் காயம்

சக தொழிலாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு இரும்பாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சேலம் இரும்பாலையில் ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் காயம்
Published on

சேலம்,

சேலம் இரும்பாலையில் இன்று திடீரென ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து பணியில் இருந்த சக தொழிலாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு இரும்பாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இரும்பாலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com