கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது - கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்

நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் - அன்புமணி தலைமையில் என்று இரண்டாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால் ராமதாஸ் இன்னும் கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கவில்லை. இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ராமதாஸ் நாளை தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

Also Read
அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள் - நல்லகண்ணு உடல்நிலை குறித்து மு.வீரபாண்டியன் பேட்டி
கோப்புப்படம்

இந்த நிலையில் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் கூட்டணி குறித்து அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.

Also Read
தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
கோப்புப்படம்

நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

Also Read
கள்ளக்காதலால் விபரீதம்: தொழிலதிபர் மனைவியிடம் 1 கிலோ தங்கம் - வைர நகைகள் அபகரிப்பு
கோப்புப்படம்

நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.

உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com