எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

பெஞ்சல் புயல் காரணமாக இன்று வரை சில இடங்களில் வெள்ளம் வடியாததால் , சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில், இன்று வரை சில இடங்களில் வெள்ளம் வடியாததாலும், பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்படுவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி

* தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* புதுச்சேரியைப் பொறுத்தவரை, நிவாரண முகாம்களாக செயல்படும் 22 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் 3 ஊராட்சி ஒன்றியங்களில் (கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம்) உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளில் வெள்ளம் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com