

சென்னை,
80-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி இல்லை என்று கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதித்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்துறை சார்ந்தோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மாளிகையில் விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நாளை தேநீர் விருந்து இல்லை என்று கவர்னர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கவர்னர் அர்லேகர் நாளை (ஆக.15) கேரளா செல்வதால் சென்னையில் தேநீர் விருந்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை இரவு கவர்னர் அர்லேகர் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.