உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றால் ஆதவ் அர்ஜுனா அரசியலில் இருந்து விலக தயாரா? - அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

தில், தைரியம் என்றெல்லாம் ஆதவ் அர்ஜுனா பேசுவது அநாகரிகமானது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றால் ஆதவ் அர்ஜுனா அரசியலில் இருந்து விலக தயாரா? - அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், தி.மு.க.வினர் தில், தைரியமிருந்தால் 25 மேயர் பதவியில் ஒரு மேயர் பதவியையாவது வென்று காட்டுங்கள் என ஆணவமாக பேசியுள்ளார்.

எங்கள் கட்சிக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் சவால் விடுத்து பேசியுள்ளார். திடீர் பொறுப்புக்கு வந்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பதவியின் கண்ணியத்தை மறந்து, தில், தைரியம் என்றெல்லாம் பேசுவது அநாகரிகமானது.

நாங்கள் தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக சொல்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளையும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்று காட்டு வோம். நாங்கள் வெற்றிபெற்றால் நீங்கள் அரசியலில் இருந்து விலகிவிடுவீர்களா? என கேள்வி எழுப்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com