ஜனவரி 25: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இதையடுத்து சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.29 ரூபாய், டீசல் லிட்டர் 81.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதன்படி லிட்டர் 88.29 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 81.14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com