மாநில அளவிலான தொடர் கபடி போட்டி

உடுமலையை அடுத்த போடிப்பட்டியில் மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடைபெற்றது
மாநில அளவிலான தொடர் கபடி போட்டி
Published on

உடுமலையை அடுத்த போடிப்பட்டியில் மாநில அளவிலான தொடர் கபடி போட்டி நடைபெற்றது

மாநில கபடி போட்டி

உடுமலையை அடுத்த போடிப்பட்டியில் மாநிலம் தழுவிய தொடர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொடக்கி வைத்தனர். நேற்று முன்தினம் தொடங்கிய போட்டி நேற்று இரவு வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வந்திருந்தனர். மழை அச்சுறுத்தல் இருந்ததால் கொட்டகை அமைக்கப்பட்டு செயற்கை ஆடுகளத்தில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து சென்று எதிர் அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர். பார்வையாளர்கள் விசில் அடித்தும் கைதட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

பரிசளிப்பு

அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக 20ஆயிரத்து 1ம், 2-ம் பரிசாக 15 ஆயிரத்து 1ம், 3-ம் பரிசாக 10ஆயிரத்து 1ம், 4-ம் பரிசாக 7ஆயிரத்து1ம் வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து இருந்தனர். உடுமலை சுற்றுப்புற பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் கபடி போட்டி நடைபெற்று வருவதால் விளையாட்டுகள் மீதான ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com