கலைஞர் கனவு இல்லம்: மத்திய அரசு நிதி தருகிறது... அண்ணாமலை பேச்சுக்கு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு

‘கலைஞர் கனவு இல்லம்’ ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
கலைஞர் கனவு இல்லம்: மத்திய அரசு நிதி தருகிறது... அண்ணாமலை பேச்சுக்கு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வதந்தி

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் ஒன்றிய அரசின் திட்டம், ஒன்றிய அரசு நிதி தருகிறது என்று பாஜக நிர்வாகி அண்ணாமலை பேசியுள்ளார்.

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவல்.

தலா ரூ.3.50 லட்சம் செலவில் கிராமப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் வகையில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒட்டுமொத்த நிதியையும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன. தற்போதுவரை 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, 29,000 வீடுகளின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளிப்பதாக தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

வதந்தியைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com