கந்தசஷ்டி திருவிழா: நெல்லை, தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள்


கந்தசஷ்டி திருவிழா:  நெல்லை, தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்து வருகிறது.

மதுரை,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரத்தைெயாட்டி தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06106) திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06105) நெல்லையில் இருந்து நாளை நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரெயில் மட்டும் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல, தாம்பரத்தில் இருந்து ஒரு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06135) இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 8 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06136) திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.45 மணிக்கு நெல்லை ரெயில் நிலையமும், நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும் வந்தடைகிறது. மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களிலும், திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரெயிலில், ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

1 More update

Next Story